Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM
தென்காசி வட்டார கல்வி அலுவலகம், வ.உ.சி. வட்டார நூலகம், எலைட் ரோட்டரி கிளப், மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை, எல்என் டிரஸ்ட் இணைந்து, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற தென்காசி காட்டுபாவா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12 பேர், திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 3 பேர், விஸ்வநாதபுரம் எம்எம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர், கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர், தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர், 9-வது வார்டு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர், மத்தளம்பாறை விவேகானந்தா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர், பண்பொழி ஆர்கேவி நடுநிலைப்பள்ளி மாணவர் ஒருவர், தென்காசி மெக்விற்றர் சிஎம்எஸ் நடுநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் என, தென்காசி வட்டாரத்தில் 28 பேர் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா தென்காசியில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இளமுருகு முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்று பேசினார். எலைட் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT