Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணவரை இழந்தவர், கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
வட்டாட்சியரிடமிருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமானச் சான்று (ரூ.72 ஆயிரத்துக்குள்), இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் 6 மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுச் சான்று (20 முதல் 40 வரை), சாதிச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றுகள் இருப்பின் அதன் நகல்களை இணைந்து, ‘மாவட்ட சமூக நல அலுவலர், சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி’ என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT