Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
கரோனா தொற்றில் இருந்து பாது காத்துக்கொள்ள வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்கள் அனை வரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், தடுப்பூசி செலுத்திக் கொள்பவருக்கு மேற்கொள்ளப் படும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் விவரங்களை பதிவேற் றுதல், ரத்தழுத்த மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை மேற்கொள்வதை ஆய்வு செய்தார். மேலும் அவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த மக்களிடம் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவற்றை கடைபிடிக்குமாறு அறி வுறுத்தினார்.
இதையடுத்து, தேரடி வீதியில் கற்பகம் கூட்டுறவு வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடையில் 2-ம் கட்ட கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை திடீரென சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மளிகைப் பொருட்களின் எண் ணிக்கை சரியாக உள்ளதா? என சோதனையிட்டார். மேலும் அவர், நியாய விலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடை பிடித்து, முகக்கவசம் அணிந் திருப்பதை விற்பனையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தேரடி வீதியில் உள்ள ஜோதி பூ மார்க்கெட் மற்றும் கடலைக்கடை சந்திப்பில் உள்ள காய்கறி அங்காடியை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது வியாபாரி களிடம் பேசும்போது, “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பொதுமக்கள் மட்டு மின்றி வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைகளில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை களை தவறாமல் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிந்து பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர் கள் அனைவரும் கரோனா தடுப் பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்றில் இருந்து உங்களையும் பாதுகாத்து கொள்ள லாம், மக்களையும் காப்பாற்றலாம்” என்றார்.
முன்னதாக அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் கரோனா வார் ரூம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா, கோட்டாட்சியர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT