Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

தொலைதூர கல்வி மூலம் மீன்வள சான்றிதழ் படிப்புகள் : ஜூலை 30 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொ) என்.வி.சுஜாத்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மூலம் நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு பற்றிய 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படவுள்ளன. நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தஞ்சாவூர், மாதவரம் மற்றும் பவானிசாகர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களிலும், மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு படிப்பு தலைஞாயிறு, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் பொன்னேரியிலும் நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங் களை ttps://www.tnjfu.ac.in/directorates/othersdir/doe/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இந்த படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் ரூ.3,000.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி கட்டணத்தை வங்கி வரைவோலை மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நாகப்பட்டினத்தில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கி வரைவோலை (அசல்), பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்), ஆதார் அட்டை (அசல்) மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சேர்த்து விரிவாக்க கல்வி இயக்குநர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், வெட்டாறு நதிக்கரை வளாகம், நாகப்பட்டினம் - 611 002 என்ற முகவரிக்கு ஜூலை 30-ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x