Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM
திருச்சி மாவட்டம் முத்தரசநல் லூரில் உள்ள ராமநாதபுரம் கூட் டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தின் செயல் பாடுகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண் ணப்பன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த திமுக ஆட்சியின்போது புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்காக கொண்டு வரப்பட்ட ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், குழாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் வெடிப்பு, முறையற்ற இணைப்புகள், சாலை விரிவுபடுத்தும் பணிகள் போன்றவற்றால் சில கிராமங்க ளுக்கு குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலுக்கு இணங்க, இதை சீர்செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் தலைமை யில், உதவி நிர்வாக பொறி யாளர்கள், உதவிப் பொறியா ளர்கள், நிலநீர் வல்லுநர்கள் மற்றும் நீர் பகுப் பாய்வாளர்கள் என 152 பேர் கொண்ட 52 சிறப்பு ஆய்வுக் குழுக்கள் நிறுவப்பட்டு, 3 மாவட்டங்களிலும் ஜூன் 14, 15-ம் தேதிகளில்(நேற்று, இன்று) கள ஆய்வு மேற்கொள்ளப்படு கிறது.
எனவே, குடிநீர் தொடர்புடைய குறைகள் இருப்பின், இம்மாவட் டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு வரும் இக்குழுவினரிடம் நேரிலோ அல்லது 04575-240481 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என்றார்.
இந்த ஆய்வில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் மணிமோகன், கண்காணிப்புப் பொறியாளர் முத்தையா, ராம நாதபுரம் எம்.பி பவானி ராஜேந் திரன், ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT