Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 219 டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பு தடுப்புகள் அமைப்பு : கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கவும் நடவடிக்கை

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் தடுப்புகள் அமைத்து தனி மனித இடைவெளிக்காக வட்டமிடுவதை ஆய்வு செய்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 219 டாஸ்மாக் மதுபானக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கும் பணியை மாவட்ட மேலாளர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திருவண் ணாமலை மாவட்டத்தில் இன்று திறக்கப்படவுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் இயங்கி வரும் 219 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் முன்னேற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றன. கடைகள் முன்பு தடுப்புகள் அமைத்து, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்ட மிடப்பட்டுள்ளது. இந்தப் பணியை மாவட்ட மேலாளர் செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, “டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையில் ஈடுபடும் ஊழியர் கள் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் அவர்கள், மூன்றடுக்கு முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி மருந்தை தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், முகக்கவசம் அணியாமல் வருப வர்களுக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது.

டோக்கன் வழங்கப்படும்

தனி மனித இடைவெளி கடைபிடிப்பதை மேற்பார்வை யாளர் மற்றும் விற்பனையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கடை முன்பு கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த டோக்கன் வழங்கும் முறையும் கடைபிடிக்கப்படும். கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்கள் நாளை (இன்று) காலை 6 மணி முதல் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x