Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

டிஏபி உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் - விவசாயிகள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியீடு : கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர்

டிஏபி உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொர்ணவாரி நெல் சாகுபடி பணி நடந்து வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் சாகுபடிக்கு தேவையான யூரியா 8,215 மெட்ரிக் டன், டிஏபி 1,582 மெட்ரிக் டன், பொட்டாஷ் 4,409 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 9,006 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள், டிஏபி உரத்தினை ரூ.1,200-க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது.

அதிகபட்ச விலைக்கு மேல் விற்பதாக புகார் ஏதும் பெறப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு ஆணை1985-ன் படி உர விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்.

வேளாண் பணிகளில் ஏற்படும் உரமிடுதல், பூச்சிநோய் தாக்குதல் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும், உரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வட்டாரங்களில் உள்ள உர ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இதன்படி கடலூர் 95248 65983,பண்ருட்டி 94860 80106, அண்ணாகிராமம் 99763 43763,விருத்தாசலம் 80723 29966, கம்மாபுரம் 94889 38590, குறிஞ்சிப்பாடி 94872 40227, பரங்கிப்பேட்டை 87543 86163,மேல்புவனகிரி 90478 26446, காட்டுமன்னார்கோவில் 87542 49075, முஷ்ணம் 87542 49075,குமராட்சி 87783 95580, கீரப்பாளையம் 73395 56021, மங்களூர் 80723 29966, நல்லூர் 94889 38590, வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் 90871 57057, 87543 86163 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x