Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து, நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் ஜூன் 11-ம் தேதி(நேற்று) போராட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் அறிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திருச்சி தொகுதி எம்.பி சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜன் மற்றும் நிர்வா கிகள் சுஜாதா, சரவணன், ரெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, புள்ளம்பாடியில் வட்டாரத் தலைவர் அர்ச்சுணன் தலைமையில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் என்.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் அரிய லூரில் நகரத் தலைவர் சந்திர சேகர், செந்துறையில் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், திருமானூரில் வட்டாரத் தலைவர் சீமான், ஜெயங்கொண்டத்தில் நகரத் தலைவர் மணிகண்டன், உடையார்பாளையத்தில் நகரத் தலைவர் அக்பர்அலி, விக்கிரமங் கலத்தில் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் தலைமையில், மாநில மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் துரை.ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் கோவை சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். கரூர் லைட்ஹவுஸ் முனை பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட துணைத் தலைவர் நாகேஷ், விகேசி பெட்ரோல் பங்க் முன்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் கீர்த்தன் பெரியசாமி ஆகியோர் தலைமையில் உட்பட மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இதேபோல, மாவட்டம் முழுவதும் 24 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே காங்கிரஸ் மாநிலச் செயலாளர் நவ்ஷாத், நாகை கோட்டைவாசல் பகுதியில் மாவட்டத் தலைவர் அமிர்தராஜா, நாகை பெருமாள் தெற்குவீதியில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கீச்சாம்குப்பம் ராஜேந்திர நாட்டார் ஆகியோர் தலைமையில் உட்பட நாகை மாவட்டத்தில் 10 இடங்களிலும், மயிலாடுதுறை அரசு மருத்துவ மனை முன்பு எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் உட்பட மயிலாடு துறை மாவட்டத்தில் 10 இடங்களி லும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் அருகே காங்கிரஸ் மாநகரத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், கும்பகோணம் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் தலத்தெரு பகுதியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT