Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் ஆர். மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பணி செய்யக்கூடிய ஒப்பந்த மற்றும் சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக ரூ.388 வழங்கப்படுகிறது. கூலியானது கடந்த 2019-2020 ஆண்டில் ரூ.359 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 26.8.2020-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ரூ.29 உயர்த்தப்பட்டு, தற்போது தினக்கூலியாக ரூ.388 பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு தூய்மை பணி தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.634 நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமல்படுத்தப்படவில்லை. 2017-2018-ல் அப்போதைய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தினக்கூலியில் ரூ.100 உயர்வு வழங்கியிருந்தார். அதன்பின் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.27, ரூ.29 மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக தூய்மைப் பணியாளர் கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, 2021-2022-ம் ஆண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி தினக்கூலியாக ரூ.634 நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT