Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM
பெரம்பலூர் மதரஸா சாலையில் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: காவல் துறையினரை முன்களப் பணி யாளராக அறிவித்து ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளதைப்போல, ஊர்க்காவல் படையினருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
கரோனா தொற்றால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்களால் கரோனா தொற்று அதிகமாக பரவுகிறது என்ற புகார்களின் அடிப்படையில், நோய்த்தொற்றால் இறந்தவர் களின் உடல்களை இனி நகராட்சி மூலம் அடக்கம் செய்ய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
அரசு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ஏற்படுத்தினா லும், கரோனா தொற்று தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி, அ.மீனா அண் ணாதுரை, செ.பிரபா செல்லப் பிள்ளை, க.ராமலிங்கம், முன் னாள் எம்எல்ஏக்கள் துரைசாமி, ராஜ்குமார், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செந்துறையில்...
அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் அருகில் குன்னம் எம்எல்ஏ கிளை அலுவலகத்தை தொகுதி எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார். பின்னர், பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பெரு நற்கிள்ளி, ஒன்றியச் செயலாளர்கள் ஞானமூர்த்தி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரோனாவால் இறந்தவர் களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்களால் கரோனா தொற்று அதிகம் பரவுவதாக புகார்கள் வருவதால் இனி நகராட்சி மூலம் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT