Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
சிவகங்கை அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை தினமும் 300 பேருக்கு திமுக சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
சிவகங்கை வாரச்சந்தை சாலையில் நகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 300 பேர் காலை, மதியம் சாப்பிட்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து அம்மா உணவகத்தை சிவகங்கை நகர திமுக சார்பில் தத்தெடுக்கப்பட்டது. ஊரடங்கு முடியும் வரை 300 பேருக்கு உணவு வழங்குவதற்குரிய பணத்தை திமுகவினர் நகராட்சியில் செலுத்தினர். தினமும் காலை, மதியம் இருவேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். இத்திட்டத்தை நகரச் செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து தொடங்கி வைத்தார்.
இதில் நிர்வாகிகள் ரமேஷ், சூரியநாராயணன், சரவணன், அயூப்கான், ராஜேந்திரன், ராஜபாண்டியன், கார்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT