Published : 04 Jun 2021 03:16 AM
Last Updated : 04 Jun 2021 03:16 AM
ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங் காட்சியகம் சார்பில் கோலப் போட்டி நடக்கிறது.
இதில், அரிசி மாவு கோலப் போட்டியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் பகுதியில் நிலவும் தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையப்படுத்தி ஜூன் 5-ம் தேதி காலையில் கோலமிட்டு அதனை படம் எடுத்து 78715 17684 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் காலை 10 மணிக்கு முன் அனுப்ப வேண்டும். கோலம் போட அரிசி மாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். வண்ணப் பூக்கள், இலைகள் போன்ற வற்றை பயன்படுத்தலாம். ரசாயன வண்ணப் பொடிகளை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம். எனது சூழல் கிராமம், இயற்கை யும் கரோனாவும், கானகம் நம் தாயகம் என்ற ஏதாவதொரு தலைப்பில், A3/A4 தாளில் வரைந்து தெளிவாக புகைப்படம் எடுத்து 94881 01976 என்ற எண்ணு க்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும். படைப்புகளின் கீழ் பெயர், கல்லூரி முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். படைப்புகளை அனுப்ப இறுதிநாள் 4.6.2021.
கட்டுரை, கவிதைப்போட்டி
கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம். எனது சூழல் கிராமம், இயற்கைக்குத் திரும்புவோம், கரோனாவும் இயற்கையும் என்ற தலைப்பில் போட்டி நடைபெறும். போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு 97902 30241 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT