Published : 04 Jun 2021 03:16 AM
Last Updated : 04 Jun 2021 03:16 AM

கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு - கரோனா பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவி : அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் வழங்கினர்

ராதாபுரம் தொகுதியில் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில்கட்சி அலுவலகமான கலைஞர்அரங்கம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான தமிழக சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 50 ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும்காய்கறி தொகுப்புகளை வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி நகரில்உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் 5,000 பேருக்கு உணவு பொருட்களையும், லூசியாபார்வையற்றோர் குடியிருப்புகளில் வசிக்கும் 100 பேருக்கு அரிசி மற்றும் நிதியுதவியையும் அமைச்சர்வழங்கினார்.

பின்னர் மாவட்ட வனத்துறை சார்பில் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்

தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் படத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். தொடர்ந்து உடன்குடி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, தென்திருப்பேரை, திருச்செந்தூர் பேரூராட்சி, கால்பட்டினம் நகராட்சி மற்றும் மேல ஆத்தூரில் நூற்றுக்கணக்கான கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

குருகாட்டூரில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். குரும்பூரில் ஏழை பெண்கள் 20 பேருக்கு தையல் இயந்திரம், வீரபாண்டியன்பட்டினம் கருணாலயம் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு, பாய், தலையணை போன்ற பொருட்கள், அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் 400 பேருக்கு மதிய உணவு, 100 பேருக்கு பாய், தலையணை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பணகுடியில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு, சா.ஞானதிரவியம் எம்.பி. உள்ளிட்ட திமுகவினர் மரியாதை செலுத்தினர். வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை, மணலிவிளை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன. வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், பணகுடி வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

கங்கைகொண்டானிலுள்ள புள்ளிமான்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பிறந்த நாளையொட்டி மாவட்டத்துக்கு தலா 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தில் ஆலமரம், புங்கன் மரம், வேங்கைமரம், நாவல்மரம், கொடுக்காபுளி உள்ளிட்ட ஆயிரம் உயரமான மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் 99 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் யோகேஷ் சிங், வனப்பாது காவலர் என்.செந்தில் குமார், மாவட்ட வனஅலுவலர் எஸ்.கவுதம் உடனிருந்தனர்.

கோவில்பட்டி

விளாத்திகுளம் திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு எம்எல்ஏஜீ.வி. மார்க்கண்டேயன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x