Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM
கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க பொது மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவ டிக்கை காரணமாக கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை யொட்டி, ராணிப்பேட்டை மாவட் டத்தில் 17 இடங்களில் சோதனைச் சாவடிகளும், மாவட்டத்துக் குள்ளாக 32 இடங்களில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலைமையில், 1 கூடுதல் எஸ்பி, 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள், 162 காவல் உதவி ஆய்வாளர்கள், 451 காவலர்கள் 108 ஆயுதப்படை காவலர்கள், 75 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 80 ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 849 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது 10 ஆயிரத்து 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து இதுவரை 20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர முழு ஊரடங்கு காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 1,188 பேரிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தவிர ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடியிருப்பதால் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மதுபான விற்பனையில் ஈடுபட்ட 832 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 1,770 லிட்டர் சாராய ஊறல்கள் 3,616 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இது தவிர வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,319 மதுபாட்டில்களும், அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து விற்பனைக் காக பதுக்கி வைக்கப்பட்ட 6,733 மதுபாட்டில்களும் கைப்பற்றப் பட்டு, மதுபாட்டில்களை கடத்தி வந்த 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்கு உதவி
காவல் துறை சார்பில் ராணிப் பேட்டை மாவட்டம் முழுவதும் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பிரச்சார பாடல்கள் மூலம் கரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு காவல் நிலை யங்களும் தினசரி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் 7-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசு கூறிய அறிவுரைகள் படி நடந்துக்கொள்ள வேண்டும்.
கரோனாவை எதிர்த்து அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா இல்லாத மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க பொது மக்கள் முன்வர வேண்டும்’’என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT