Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

தி.மலை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூலமாக அரசு மருத்துவமனைகளுக்கு - தினசரி 5 ஆயிரம் உணவு பொட்டலம் வழங்கல் : துணை சபாநாயகர் பிச்சாண்டி தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு தயாரிக்கப்படுவதை நேற்று ஆய்வு செய்த துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. அருகில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்கள் மூலம் தினசரி 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படு கிறது என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூலம் உணவு பொட்டலம் தயாரிக் கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 13-ம் தேதி முதல் உணவு வழங்கப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சார்பில் 1,000 உணவு பொட்டலம், டிபிஎஸ் அறக்கட்டளை சார்பில் 550 உணவு பொட்டலம், காமாட்சி அம்மன் கோயில் சார்பில் 500 பேருக்கும், செங்கம் புதூர் மாரியம்மன் கோயில், நீப்பத்துறை வெங்கடாஜலபதி கோயில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் சார்பில் தலா 250 உணவு பொட்டலம் என தினசரி மொத்தம் 2,800 உணவு பொட்டலம் தயாரித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேட்டவலம் மற்றும் கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், படைவீடு ரேணுகாம் பாள் கோயில் சார்பில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு 500 உணவு பொட்டலம், செய்யாறு வேத புரீஸ்வரர் கோயில், முணுகப்பட்டு பச்சையம்மன் கோயில் சார்பில் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலம், எலத்தூர் மோட்டூர் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் பருவதமலை சிவன் கோயில் சார்பில் போளூர் அரசு மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலம், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மன் கோயில் சார்பில் வந்த வாசி அரசு மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலம் மற்றும் அன்னதான திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு தினசரி 1,200 உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள அன்னதானக் கூடத்தில் உணவு தயாரிக்கப் படுவதை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், உணவை ருசித்து பார்த்தார். மேலும், உணவை தரமாக தயாரித்து நோயாளிகளுக்கு வழங்க அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில் உட்பட பல கோயில்கள் மூலம் தினசரி 5 ஆயிரம் உணவு பொட்ட லங்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப் படுகின்றன.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த 13-ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

ஆய்வின் போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கோட்டாட்சியர் வெற்றிவேல், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x