Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM
சேலம் மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவசர உதவி மையத்தில், உதவி கோரிய முதியவருக்கு, அவசர உதவிக் குழுவினர் 25 நிமிடத்துக்குள் மருந்து வாங்கிக் கொடுத்து உதவினர்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கில், அவசர உதவி தேவைப்படும் முதியோர் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், மாநகர காவல்துறையில், அவசர உதவி மையத்தை ( தொடர்பு எண்கள்- 0427 2220 200, 83000 49736, 94981 66289 )அமைத்துள்ளார்.
இந்த அவசர உதவி மையத்தை நேற்று தொடர்பு கொண்ட சேலம் மகேந்திரபுரியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், மருந்து வாங்குதற்கு வெளியே செல்ல முடியவில்லை என்று தெரிவித்து உதவி கோரினார். இதையடுத்து, அடுத்த 25 நிமிடங்களில், அவசர உதவி மையக் குழுவினர், அந்த முதியவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்து உதவினர். அவசர மையக் குழுவினரின் துரிதமான சேவையை, மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT