Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலியில் தளர்வு களற்ற ஊரடங்கு காலத்தில் மாநகராட்சி சார்பில் மாநகரின் அனைத்து பகுதிகளிலும், நடமாடும் காய்கனி விற்பனை சேவை வாகனங்கள் மூலமாக விநியோகிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் பொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டே கைபேசி, தொலைபேசி வாயிலாகவே அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் ஆர்டர் செய்து மளிகை பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
அனுமதிக்கப்பட்ட அங்காடிகள்: நிவாசாநகர் கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் - 94872 10411, திருநெல்வேலி டவுண் முருகன் டிரேடர்ஸ்- 97915 54851, திருநெல்வேலி டவுண் அருணா சூப்பர் மார்க்கெட்- 93661 13355, பாளையங்கோட்டை பாலன் சூப்பர் மார்க்கெட் - 73730 58730, பாளையங்கோட்டை அன்னபூர்ணா பலசரக்கு கடை- 98944 78007, திருநெல்வேலி டவுண் எஸ்.பி. டிரேடர்ஸ் - 93445 60777, திருநெல்வேலி டவுண் போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் - 95855 16512 , பாளையங்கோட்டை வசந்தம் சூப்பர் மார்க்கெட் - 98420 77007 ஆகிய எண்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்பு கொண்டு பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT