Published : 25 May 2021 03:12 AM
Last Updated : 25 May 2021 03:12 AM
இலவச சட்ட உதவி பெற மின்னஞ்சல், வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹர் உத்தரவின்பேரில் ஊரடங்கு காலத்தில் ஏற்படுகிற குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் , முதியோர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் இலவசமாக சட்ட உதவி பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி சட்ட ரீதியான பிரச்சினைகள் இருப்பின் தங்களின் பெயர்,பாலினம், வயது, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற விவரங்களை குறிப்பிட்டு தங்களது குறைகளை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை "dlsacuddalore@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 944 344 3281 என்கிற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அலுவலர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு இலவச சட்ட உதவி வழங்க ஏற்பாடு செய்வார்கள். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இலவசமாக சட்ட உதவியை பெற்றுக் கொள்ளலாம் என கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான பாக்கியம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT