Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM

விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஏற்பாடு : வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட வேளாண்மைதுறை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கார் நெல் நடவுப்பணி நடைபெற்று வருகிறது. வேளாண் இடுபொருட்களான உரம், விதைகள் மற்றும் பூச்சி மருந்துகள் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க, வேளாண்மை துறை யினரால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நண்பகல் வரை விதை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரம், விதை, பூச்சி மருந்து விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் விதைகள் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், நடவுப்பணிக்காக வேளாண் இடுபொருட்களை விற்பனை நிலையத்திலிருந்து வயலுக்கு கொண்டு செல்லுதல், விவசாயத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லுதல், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் இடையூறு ஏற்பட்டால், விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.

வட்டாரம் வாரியாக வேளா ண்மை உதவி இயக்குநர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்:

அம்பாசமுத்திரம்- உமா மகேஸ்வரி- 94894 77619, சேரன்மகாதேவி- கற்பக ராஜ்குமார் 99429 82578, பாளையங்கோட்டை- முரளி ராகினி 94441 07556, நாங்குநேரி- ஜாஸ்மின் லதா 94862 71166, களக்காடு- வசந்தி 94421 51397, வள்ளியூர்- சுனில்தத் 63742 54317, ராதாபுரம்- சுஜாதாபாய் 94866 52706,மானூர்- ஏஞ்சலின் கிரேபா 94423 38354.

பூச்சி மருந்து விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x