Published : 20 May 2021 03:13 AM
Last Updated : 20 May 2021 03:13 AM

கடமலைக்குண்டு அருகே தூளி சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் மரணம் :

கண்டமனூர்: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே கோவில் பாறையைச் சேர்ந்தவர் மைப்பாறை (38). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஹரிபிரசாத் (12). கோவில்பாறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் கட்டப்பட்டிருந்த தூளியில் தனது தம்பி அர்ஜுனனுடன் ஹரிபிரசாத் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தூளியின் சேலை ஹரிபிரசாத்தின் கழுத்தை இறுக்கியது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் கே.அமுதா விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x