Published : 20 May 2021 03:14 AM
Last Updated : 20 May 2021 03:14 AM
திருச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விளைபொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டை தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி நகருக்குள் காய்கறி விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. எனவே, அனுமதிச் சீட்டு பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் தொடர்பு எண்கள்: அந்தநல்லூர், திருவெறும்பூர் 96594 28300, லால்குடி 90477 33669, மண்ணச்சநல்லூர் 94430 38397, மணிகண்டம், மணப்பாறை 99767 42142, மருங்காபுரி 98402 32381, முசிறி 98439 91326, புள்ளம்பாடி 88835 96215, தாத்தையங்கார்பேட்டை 82487 52014, தொட்டியம் 98427 53259, துறையூர் 81483 56428, உப்பிலியபுரம் 88705 04162, வையம்பட்டி 97155 88927.
மேலும், கரோனா பரவலால் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சனிக்கிழமைகளில் காய்கறி மற் றும் பழங்கள் அறுவடையைத் தவிர்த்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT