செவ்வாய், செப்டம்பர் 23 2025
Last Updated : 18 May, 2021 03:12 AM
Published : 18 May 2021 03:12 AM Last Updated : 18 May 2021 03:12 AM
மதுரை: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைவால் (வண்டி எண் 06849) திருச்சி-ராமேசுவரம் சிறப்பு ரயில், (வண்டி எண் 06850) ராமேசுவரம்-திருச்சி சிறப்பு ரயில் ஆகியவை மே 19 முதல் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன. மே 20 முதல் ஜூன் 1 வரை (வண்டி எண் 02667) நாகர்கோவில்-கோவை இரவு நேர சிறப்பு ரயில் மற்றும் மே 19 முதல் 31 வரை (வண்டி எண் 02668) கோவை-நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT