Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

ஊரடங்கில் விதிமீறிய 26,500 பேர் மீது வழக்கு :

திருச்சி

திருச்சி மாநகரப் பகுதிகளில் ஊர டங்கில் விதிகளை மீறி வாகனங் களை இயக்கியதாக மே 15-ம் தேதி வரை 26,500 பேர் மீது வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், இதைக் கட்டுப் படுத்த மே 24-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஊரடங்கு விதிகளை மீறி அதிக அளவில் வாகனங்களில் மக்கள் வெளியில் சுற்றி வந்ததால், மே 14-ம் தேதி முதல் ஊரடங்கு விதிமுறைகளை தமிழக அரசு கடுமையாக்கியது. மளிகை, பால், காய்கறிகள் உள்ளிட்ட கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையில் மட்டுமே திறந் திருக்க வேண்டும் என உத்த ரவிட்டுள்ளது. தேநீர் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று (மே 17) முதல் வாகனங்களை இயக்கு வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, வாகனங்களை மாவட்டத்துக்குள்ளும், மாவட் டத்துக்கு வெளியேயும் இயக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகரப் பகுதிகளில் மே 8-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 26,500 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மீது 1,400 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. கட்டுப்பாட்டை மீறி கடைகளை நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், நேற்று முழு ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகர சாலைகள் அனைத்தும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச் சோடிக் காணப்பட்டன.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். இதில், ஊரடங்கை மீறியதாக 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 பேர் கைது செய்யப்பட்டனர். 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், அவசியமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்தி ரிந்தவர்களை போலீஸார் நேற்று தடுத்து நிறுத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றிய 25 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கு விதிகளை மீறிய 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x