Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM
முகக்கவசம் அணியும் போது வாய், மூக்கு பகுதி மூடி இருக்கும் வகையில் அணிந்திருக்க வேண்டும், முறையாக அணியா விட்டால் அபராதம் விதிக்கப்படும், என ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒரு சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவ்வாறு வெளியே சுற்றும் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாகஅணிவதில்லை. ஒரு சிலர் கழுத்திற்கு கீழும், சிலர் மூக்கு பகுதியை மூடாமலும் அரைகுறை யாக அணிந்துள்ளனர்.
கரோனா வைரஸ் 99 சதவீதம் மூக்கு வழியாக தான் பரவுகிறது. எனவே, முகக்கவசம் அணியும் போது வாய், மூக்கு பகுதி மூடி இருக்கும் வகையில் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முறையாக முகக் கவசம் அணியா தவர்களுக்கும் தற்போது அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT