Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

வேலூர் மாவட்ட எஸ்பி செல்வகுமார் உட்பட - 698 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார் உட்பட 698 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற் படுத்தி வருகிறது. பெருந் தொற்று வேகமாக பரவி வருவ தால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தைக் காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 32 ஆயிரத்து 481 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். இதில், 28 ஆயிரத்து 428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற் போது, 3 ஆயிரத்து 607 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 446 பேர் உயரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 698 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நகர் புறங்களை தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி சார்பில் கிராமம் தோறும் கரோனா பரிசோதனைகள் அதி கரிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, கண் எரிச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவு இருந்தால் சற்று தாமதிக்காமல் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனாவை தடுக்க பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x