Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து ஆதரவளிக்கும் படியும், உதவிசெய்யும் படியும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவிவருகிறது. குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது குற்றமாகும். தத்தெடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை கொடுக்கவோ, பெறவோ செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறான செய்தியை வாட்ஸ்அப் மூலம் பரப்புவதும் குற்றமாகும். சட்டரீதியாக தத்தெடுக்க விரும்புவர்கள் www.cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பு நேரிட்டிருந்தாலோ, அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பட்சத்தில், அக்குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாக்கலாம். இதற்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சைல்டுலைன் - 1098, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு - 0462 290 1953, 255 1953. குழந்தை நலக்குழு - 0462 232 1098.
குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் குறித்ததகவல் மற்றும் புகார்களை சைல்டுலைன் - 1098, மாவட்ட சமூக நல அலுவலகம் 0462 2576265 மற்றும் மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு 0462 2901953, 2551953 ஆகிய தொலைபேசி எண்களில், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT