Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
திருச்சி, பெரம்பலூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் மாவட்டங்களில் 27.93 லட் சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி பெறு வதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய் யும் பணி நேற்று தொடங்கியது.
அரிசி ரேஷன் கார்டுதாரர் களுக்கு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக மே 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.2,000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருச்சி மாவட்டத் தில் 1,224 ரேஷன் கடைகள் மூலம் 8,06,198 ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, ரேஷன் கார்டு தாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியை ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். தொடர்ந்து, நாளையும், விடுபட்டவர்களுக்கு மே 13-ம் தேதியும் டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
ரேஷன் கடையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசையில் நிறுத்தப்படாமல், முன்னுரிமை அடிப்படை யில் நிவாரண நிதி வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் உட் பட அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். இந்தப் பணிகள் குறித்து புகார்கள் இருந்தால் 0431 2411474, 94450 45618 ஆகிய எண்களில் தெரி விக்கலாம் என ஆட்சியர் எஸ்.திவ்ய தர்ஷினி தெரிவித்துள்ளார்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் மூலம் 1,82,684 ரேஷன் கார்டு தாரர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,65,947 ரேஷன் கார்டுதாரர்களுக்கும்(இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட), தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,185 ரேஷன் கடைகள் மூலம் 6,67,941 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3,76,510 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களிலும் டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
இதேபோல, கரூர் மாவட்டத்தில் 2.97 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக, கரூர் நகரில் சில இடங்களில் ரேஷன் கடைகளுக்கே பொதுமக்கள் வரவழைக்கப்பட்டு, திமுகவினரால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது, பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கரூர் நகராட்சி தாந்தோணி கருப்பகவுண்டன்புதூர் ரேஷன் கடையில், ரேஷன் கார்டுதாரர் களுக்கு டோக்கன்களை திமுக கரூர் தெற்கு நகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் விநியோகம் செய் தார். நிகழ்ச்சியில், துணைச் செயலாளர் லதா, வட்டச் செய லாளர் விஷ்வா, தொமுச பாலன், ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT