Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர் ஷினி விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை சேதமடைந்திருப்பது நேற்று முன்தினம் காலை தெரியவந்தது. தகவலறிந்த முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலையைச் சேதப்படுத்தி யவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்தி மார்க்கெட் போலீ ஸில் வெல்லமண்டி நடராஜன் புகார் அளித்தார்.
மேலும், இச்சம்பவத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரி வித்திருந்தனர். இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, ஏற்கெனவே தலைவர்களின் சிலை களில் சுற்றப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலையில் சுற்றப்பட்டிருந்த துணியை அகற்றிய போது, சிலையின் வலது கை மணிக்கட்டு பகுதியில் எதேச்சை யாக உடைந்தது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அந்தச் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்படவில்லை.
முதல்வர் உத்தரவு
இதையடுத்து, முதல்வர் உத்தரவின்படி, சேதமடைந்த பகுதி உடனடியாக பொதுப்பணித் துறை மூலம் சீரமைக்கப்படும். மேலும், திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு இரும்புக் கூண்டுகள் விரைவில் அமைக்கப்படும். இனி புதிதாக தலைவர்களின் சிலை அமைக்க வேண்டுமெனில், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றார்.இதனிடையே, சேதமடைந்த எம்ஜிஆர் சிலையை அதிமுக வினரே தங்களது சொந்த செலவில் நேற்று சீரமைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT