Published : 10 May 2021 06:25 AM
Last Updated : 10 May 2021 06:25 AM
கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலையோரம் உள்ள ஆதரவற்றோர், மனநலம்பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் உணவு வழங்கினர். தினமும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா 2-வது அலை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு சார்பில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குழுத்தலைவர் ஜெபசிங்,செயலாளர் ராபர்ட் செல்லையா, பொருளாளர் பாலா, இணை செயலாளர்கோல்டுவின், பசுமை தளிர் அறக்கட்டளை இயக்குநர் கந்தையா ஆகியோர் தலைமையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப் பட்டோருக்கு உணவு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT