Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
சாலை, கால்வாய் மற்றும் போக்குவரத்து போன்ற பொது சேவை பிரச்சினைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தை அணுகி நீதியை பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான சி.திருமகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு பொருளை பிரதிபலனுக்காக வாங்கி உபயோகப் படுத்துபவர் நுகர்வோர். ஒரு சேவையை பிரதிபலனுக்காக அனுபவிப்பவரும் நுகர்வோர். ஒரு பொருளின் தரத்தில் குறைபாடு, எடைக் குறைவு, காலாவதியான தேதிக்கு பிறகு விற்பனை செய்வது, நிர்ணயம் செய்யப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது, கலப்பட பொருளை விற்பனை செய்வது என்பது நுகர்வோர் உரிமைக்கு எதிரானது.
அதேபோல், மருத்துவம் மற்றும் போக்குவரத்து சேவையில் உள்ள குறைபாடும் நுகர்வோர் உரிமைக்கு எதிரானது. பொருள் அல்லது சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைபாடு உள்ள பொருள் அல்லது சேவைக்காக செலுத்திய தொகையை திரும்ப பெறவும், நஷ்டஈடு பெறவும் உரிமை உள்ளது.
ரூ.1 கோடி வரை நஷ்டஈடு
பாதிக்கப்பட்டவர் தனது மனுவை நேரடியாகவும் அல்லதுநுகர்வோர் பாதுகாப்பு குழு மூலமாகவும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து வழக்காட லாம். அதற்கு, நீதிமன்ற கட்டணம் மற்றும் சட்ட வல்லுநர் கட்டணம்கிடையாது. மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு பெறலாம்.
ஒவ்வொரு மாவட்ட தலை நகரில் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் செயல்படு கிறது. நுகர்வோர் சார்ந்த பிரச்சினைகள் தவிர சாலை, கால்வாய் மற்றும் போக்குவரத்து போன்ற பொது சேவை பிரச்சினைகளுக்கும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி நீதி பெற முடியும். மக்கள் நீதிமன்ற நீதிபதி வழங்கும் தீர்ப்பு என்பது, சிவில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு ஒப்பானது.
மாற்று முறை தீர்வு
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல் படும் மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் செய்யாறு, ஆரணி, போளூர், செங்கம் மற்றும் வந்தவாசியில் செயல்படும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலமாக தீர்வு காணலாம். வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பும், சட்டப்பணிகள் குழுவில் தீர்வு காண முடியும். சமரசத் தீர்வுக்கு மேல் முறையீடு இல்லை. விரைவான நீதியை பெறலாம்.
நீண்ட காலமாக முடிக்கப் படாமல் இருந்த வழக்குகள், மணவாழ்க்கை வழக்குகளும் சுமூகமான முறையில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர குற்றச் செயல்கள் மூலம் காயமடைந்த நபர்கள், கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பம், பாலியல் வழக்குகள், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரும் மாவட்ட சட்டப்பணிகள் குழு மூலமாக மனு தாக்கல் செய்து நஷ்டஈடு பெற முடியும்.
‘ஆன்லைன்’ மூலமாக மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண வசதி இல்லாததால் ஏழைகளுக்கு கிடைக்கக் கூடிய நீதி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்திய அரசியலமைப்பு மூலம் செலவு இல்லாமல் நீதியை பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இலவச சட்ட உதவியை பெற மாநில சட்டப்பணிகள் குழு, மாவட்ட சட்டப்பணிகள் குழு, வட்ட சட்டப்பணிகள் குழு மூலமாக பிரச்சினைகளுக்கு மக்கள் தீர்வு காண வேண்டுகிறோம்.
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவராக முதன்மை மாவட்ட நீதிபதியும், செயலாளராக சார்பு நீதிபதியும் திருவண்ணாமலை நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவராக மாவட்ட நீதிபதியும் செயல்படுகின்றனர்.
மேலும், dlsatiruvannamalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் மற்றும் 04175 – 232845 என்ற தொலைபேசி எண் மூலமாக அணுகலாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT