Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் 691 பேருக்கு புதிதாக நேற்று கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 332 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 64, மானூர்- 45, நாங்குநேரி- 40, பாளையங்கோட்டை- 63, பாப்பாக்குடி- 4, ராதாபுரம்- 33, வள்ளியூர்- 75, சேரன்மகாதேவி- 20, களக்காடு- 15.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் நேற்று 6 பேரும், தென்காசி மாவட்டத்தில் 4 பேருமாக மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 280 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2,127 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,500 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுவரை 90,491 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 31,698 பேருக்கு இரண்டாம்கட்ட தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.
கரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT