Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
திருநெல்வேலி மாவட்டம் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்துமவளாகத்திலிருந்து, 8 ஆயிரம் லிட்டர்திரவ ஆக்சிஜன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவுக்கு சிகிச்சைக்கு அளிப்பதற்காக 1,240 படுக்கை வசதிகள் உள்ளன. இதில்,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. கடந்த சில நாட்களாக நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், மாவட்டத்தில் 11 தனியார் மருத்துவமனைகளில், 450 படுக்கைவசதிகள் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களாக தனியார்மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அங்கு புதிய கரோனா நோயாளிகளை அனுமதிப்பதில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,240 படுக்கைகளும் நிரம்பியிருக்கின்றன. இம்மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் மூலமாக சிலிண்டர் ஆக்சிஜன் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் உள்ள 13 ஆயிரம் லிட்டர் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு கொள்கலன்களில் திரவ ஆக்சிஜன் இருப்பு கிடுகிடுவென குறைந்தது.
தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ்கார்ப்பரேஷன் மூலமாக, மகேந்திரகிரியிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகத்திலிருந்து 8 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு, கொள்கலனில் நிரப்பப்பட்டது.
இதுபோல், 6 ஆயிரம் லிட்டர்திரவ ஆக்சிஜன் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால், நோயாளிகள் அரசுமருத்துவமனைகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT