Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு - பட்டூரில் வேளாண் விரிவாக்க அலுவலகம் முற்றுகை :

திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் வேளாண் விரிவாக்க அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

திட்டக்குடி அருகே வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்களூர் வட்டாரத்தில் கடந்த 45 நாட்களாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் நெல் வீணாகிறது. பயிர் காப்பீடு செய்த தொகை கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள், மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அளித்தனர். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத வேளாண் அதிகாரிகளை கண்டித்தும் பட்டூர் வேளாண் விரிவாக்க அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்க தலைவர்கள் மருதாசலம், மேலக்கல்பூண்டி விஜயகுமார், சிறுபாக்கம் மணிகண்டன், தொழுதூர் செல்வமணி, ஆக்கனூர் சுப்ரமணியன், நிதிநத்தம் ராமலிங்கம், ஆதமங்கலம் சங்கர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேளாண் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் இல்லாததால் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானம் பேசினர்.

இந்நிலையில் வேளாண் உதவிஇயக்குநர்(பொறுப்பு) அமுதா அலுவலகம் வந்தார். அதன்பின் விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து சமாதானமடைந்த விவசாயிகள் கலைந்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x