Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் : உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

திருச்சி

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி அறிவுறுத்தி யுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை தடுப்பு தொடர்பாக கோட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூ ராட்சி செயல் அலுவலர்கள் ஆகி யோருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தலைமை வகித்துப் பேசியது: கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப் பாடுகளைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி கரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண் டும். வணிக நிறுவனங்களில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி கடை பிடிக்கப்படாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதனைச் சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை. தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனு மதி இல்லை. இவற்றை உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அலுவலர்கள் தினமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், ரங்கம் சார் ஆட்சியர் விசுமகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப் பிரித்தா, அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வருவாய்த்துறையி னர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x