Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பணியாளர்களும் மே- 1-ம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்டோர் சுமார் 9 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சேலம் கோட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், பணிமனைகளில் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 45-வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் மே 1-ம் தேதி பணிக்கு வரும்போது, கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகள் கூறிய தாவது:
அரசு போக்குவரத்துக் கழக சேலம் , தருமபுரி மண்டலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 799 பேர் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 930 பேர், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நடந்த முகாம் மூலம் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
மற்றவர்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அறிகிறோம். எனினும், 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே- 1-ம் தேதிக்குள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். தடுப்பூசி போடாதவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT