Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

நெல்லையில் 872, குமரியில் 367 பேருக்கு தொற்று - பாளை. மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளர் கரோனாவால் மரணம் :

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

திருநெல்வேலி/ நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் 872 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும்465 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வட்டாரம் வாரியாக பாதிப்பு விவரம்: அம்பாசமுத்திரம்- 59,மானூர்- 42, நாங்குநேரி- 36, பாளையங்கோட்டை- 88, பாப்பாக்குடி- 15, ராதாபுரம்- 37, வள்ளியூர்- 67, சேரன்மகாதேவி- 40, களக்காடு- 23. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளர் தங்கையா உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல்பகுதியை சேர்ந்த இவர், கரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 5 பேர் தொற்று காரணமாக திருநெல்வேலிஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 229பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,1695 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10,002 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 1,519 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் பேருக்குகரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 67 வயதுமுதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

முதல்கட்ட கரோனா தடுப்பூசி 84,861 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 25,408 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் சென்ற 41,979 பேரிடமிருந்து மொத்தம் ரூ.80.51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் குமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் கொண்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தற்போது மீன் சந்தைகள், கோழி மற்றும் இறைச்சி கடைகள் சனிக்கிழமைகளிலும் செயல்பட அனுமதியில்லை என்றும், இந்த உத்தரவைமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குமரிமாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x