Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM
வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 969 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு ஆலோ சித்து வருவதால், கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர 3 மாவட்ட நிர்வாகங்களும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கரோனா பரவல் ‘ஜெட்’ வேகத்தில் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப் பாக, மாநகராட்சி மற்றும் பெரு நகரங்களில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. பல்வேறு கட்டுபாடுகளை விதித்தும், பொது மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட் டத்தில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை யாகும். கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை போராடி வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா பரவல் அதிக மாக காணப்படுகிறது. தினசரி பெருகி வரும் கரோனா பரவலை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் கரோனா கண்காணிப்பு அலுவலர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, 1-வது மண்டலத்துக்கு மாநகராட்சி பொறி யாளர் சீனிவாசனும், 2-வது மண்டலத்துக்கு உதவி ஆணையாளர் செந்தில்குமாரும், 3-வது மண்டலத்துக்கு வருவாய் பிரிவு உதவி ஆணை யாளர் சுதாவும், 4-வது மண்ட லத்துக்கு செயற்பொறியாளர் கண்ணனும் கரோனா கண் காணிப்பு அலுவலர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா கண்காணிப்பு அலுவ லர்கள் மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட கரோனா தொடர்பான அனைத்து பணி களையும் இன்று முதல் கவனிப்பார்கள் என மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித் துள்ளார்.
அதேநேரத்தில், வேலூர் மாவட்டத்தில் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், அரசு அறிவிப்பின்படி 3 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் இயங்கி வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அதை மூடுவதற்கான ஏற்பாடுகளையும், விதிமீறி செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 9,649 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட 965 பேர் அரசு மருத்துவமனை கள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகள் 347 ஆக உயர்த்தப்பட்டுள் ளது. 4,521 பேர் சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள் ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 139 ஆக உயர்ந் துள்ளது.கரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் சிகிச்சை யில் இருந்த 115 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதைத்தொடர்ந்து, சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ சிகிச்சைகள் அளித்து விரைவாக குணப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தி யுள்ளார்.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங் கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஆய்வுசெய்து, அங்கு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 19,742 -ஆக அதிகரித்துள்ளது. 2,142 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 201 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரை 2.52 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர் புறங்களை தொடர்ந்து தற்போது கிராமப்பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை, திமிரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் நிறைய பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கரோனா பரவல் அதிகமாக காணப்படும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு தடுப்புப்பணிகள் துரிதப்பட் டுள்ளன. தடுப்பூசி போடுவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT