Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
சேலம், ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்த கோவை- சென்னை சதாப்தி, கோவை- பெங்களூரு உதய் உள்ளிட்ட சிறப்பு ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் வழியாக கோவை-சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்-கோவை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த சதாப்தி சிறப்பு ரயில் இயக்கம் நாளை (29-ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுகிறது.
கோவை- கேஎஸ்ஆர் பெங்களூரு (எண்.06154), கேஎஸ்ஆர் பெங்களூரு- கோவை (எண் 06153) ஆகிய உதய் சிறப்பு ரயில்களும் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், கோவை, ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் கொச்சுவேலி- பனஸ்வாடி (எண்.06319) வாரம் இருமுறை சிறப்பு ரயில், நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் பனஸ்வாடி- கொச்சுவேலி (எண்.06320) சிறப்பு ரயிலும் 30-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், எர்ணாகுளம்- பனஸ்வாடி (எண் 06129) வாரம் இருமுறை சிறப்பு ரயில் மே-3 ம் தேதி முதல் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனஸ்வாடி- எர்ணாகுளம் (எண் 06130) வாரம் இருமுறை சிறப்பு ரயில் மே 4-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT