Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM
திருச்சி மாவட்டத்தில் மாநகருக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் கரோனா 2-வது அலையின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. முதல் அலையில் திருச்சி மாநகர் பகுதி யில் மட்டுமே பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் தற்போது 2-வது அலையில் திருச்சி மாநகர் பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் திருச்சி மாநகரில் அரிய மங்கலம் கோட்டத்தில் 33 பேர், கோ.அபிஷேகபுரம் கோட் டத்தில் 62 பேர், பொன்மலை கோட்டத்தில் 61 பேர், ரங்கம் கோட்டத்தில் 46 பேர் என 202 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புறநகர் பகுதியிலுள்ள ஒன்றியங்களான தொட்டியத்தில் 47, அந்தநல்லூரில் 26, புள்ளம்பாடியில் 23, மண்ணச்ச நல்லூரில் 21, திருவெறும்பூரில் 16, மணிகண்டத்தில் 15, முசிறியில் 10, மணப்பாறையில் 8, தாத்தை யங்கார்பேட்டையில் 6, மருங்கா புரியில் 5, லால்குடியில் 4, துறையூரில் 4, உப்பிலியபுரத்தில் 3, வையம்பட்டியில் 2 என 190 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தொட்டியம் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் திடீரென 47 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டதற்கு, அங்குள்ள என்.எம்.புதூரில் கடந்த ஏப்.14-ம் தேதி நடைபெற்ற திருவிழா முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. இதில் பங்கேற்ற சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், மருத்துவக் குழுவினர் அக்கிரா மத்துக்குச் சென்று சுமார் 100 பேரிடம் பரிசோதனை செய்தனர். அவர்களில் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து அந்த கிராமத்தில் மீதமுள்ள அனைவரையும் பரிசோதிக்கவும், கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5,58,238 பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில், 21,563 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18,392 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 209 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 2,962 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
கரோனா பரவல் முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலை மிகவும் சவாலாக இருக்கிறது. இணை நோய்களே இல்லாத நிலையிலும் சிலரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது. ஒருவருக்கு தொற்று வந்தால், அவரது குடும் பமே பாதிக்கப்படுகிறது. சிலர் இறுதிக்கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால், அவர்களைக் காப் பாற்ற பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இனிவரும் நாட்கள் நம்மை மிகவும் அச்சப்பட வைக்கின்றன.
எனவே பொதுமக்கள் கவன முடன் இருக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT