Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கரோனா தொற்று அதிகரிப்பால் தேனி உழவர் சந்தை மூடல் :

தேனியில் நேற்று முதல் மூடப்பட்ட உழவர் சந்தை.

தேனி: தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 184 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 1,161 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனி உழவர் சந்தை நேற்று முதல் மூடப்பட்டது. இதனால் இங்குள்ள விவசாயிகள் வெளியில் உள்ள நடைபாதையில் காய்கறிகளை விற்றனர்.

இன்று முதல் தேனி ரத்தினம் நகரில் உள்ள வேளாண்மை விற்பனைக் கூட வளாகத்தில், உழவர் சந்தை தற்காலிகமாகச் செயல்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நகரில் இருந்து வெகுதூரத்தில் இந்த இடம் உள்ளதாகவும், நகர் மையத்திலேயே உழவர் சந்தையை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x