Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
நேரக் கட்டுப்பாட்டுடன் சலூன் களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரோனா தொற்று பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. புதிய கட்டுப்பாடுகளில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சலூன்கள் இயங்க அனுமதியில்லை.
இந்நிலையில், நேற்று சேலம் மண்டல முடிதிருத்தும் தொழி லாளர்கள் திரளாக வந்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
முதல்கட்ட கரோனா பரவலின் போது முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், கடன் தொல்லை ஏற் பட்டுள்ளது. அரசு அறிவித்த ரூ.2,000 ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது, சலூன்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படும். எனவே, கரோனா விதிகளை முழுமையாக பின்பற்றும் எங்களுக்கு, நேரக் கட்டுப்பாட்டுடன் சலூன்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி, பவானி கோபி சத்தியமங்கலம் புன்செய் புளியம்பட்டி ஆகிய நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய சலூன்கடை களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன், நேரக்கட்டுப் பாட்டுடன் நாங்கள் பணிபுரிய தயாராக இருக்கிறோம் எனத் தமிழ் நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பிலும், ஈரோடு மாவட்ட அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பிலும் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதேபோல் நாமக்கல் மாவட்ட அழகுக் கலை நிபுணர்களும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT