Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையில் இருக்கும் தபால் வாக்குகளை முன் அனுமதி பெற்று தள்ளுபடி செய்ய வேண்டும் என பயிற்சிக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தபால் வாக்குகள் எண்ணும் பணி குறித்த பயிற்சிக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். இதில், தபால் வாக்குகளை எண்ணும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கான வழிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டது. அதில், தபால் வாக்குகள் எண்ணுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் 3 மேஜைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜை யிலும் ஒரு சுற்றில் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு முன்னர் வரை பெறப்படும் அனைத்து தபால் வாக்கு சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண் ணிக்கைக்கு உட்படுத்தப்படும். அன்றைய தினம் காலை 8 மணிக்குப் பிறகு பெறப்படும் தபால் வாக்கு சீட்டுகள் நிராகரிக் கப்படும்.
தபால் வாக்கு சீட்டில் உறுதிமொழி இல்லை என்றாலும் அலுவலரின் கையொப்பம் மற்றும் வாக்காளர் கையொப்பம் இல்லை என்றாலும் தள்ளுபடி செய்யப்படும். வரிசை எண்கள் வேறுபாடாக இருந்தாலும், தள்ளு படி செய்யப்படும். தபால் வாக்கு சீட்டில் ஒரு வேட்பாளருக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருந்தால் அல்லது எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக் களிக்கவில்லை என்றாலும் தள்ளுபடி செய்யப்படும். போலி யான அஞ்சல் வாக்கு சீட்டுக்கள் என கண்டறியப்பட்டால் தள்ளுபடி செய்யப்படும்.
கிழிந்து சேதமடைந்த நிலையில் உள்ள மற்றும் முற்றிலும் கசங்கிய தபால் வாக்கு சீட்டுகள் தள்ளுபடி செய்யலாம். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முன் அனுமதி பெற வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட தபால் வாக்குகளை தனி யாக பிரித்து அடுக்கி வைக்க வேண்டும். மேலும், தபால் வாக்கு களை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எழுத வேண்டும்.
பின்னர், பதிவான தபால் வாக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக பிரித்து அதை முக வரிடம் காண்பித்த பிறகே எண்ணிக்கையில் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவாகி உள்ள தபால் வாக்குகளை 50 எண்ணிக்கை கொண்ட கட்டு களாக கட்டி அதனை எண்ணி முதல் சுற்று முடிவில் அறிவிக்க வேண்டும்.
இதே முறையில் ஒவ்வொரு சுற்றிலும் 500 தபால் வாக்குகள் எண்ணி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் எடுத்துக் கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT