Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

நெய்வேலியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் :

நெய்வேலி டவுன்ஷிப் செக்யூரிட்டி அலுவலகம் அருகே தொமுசவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர்

நெய்வேலியில் தொழிலாளர் முன் னேற்ற சங்க தேர்தல் நேற்று நடை பெற்றது.

நெய்வேலி என்எல்சி நிறுவ னத்தின் அங்கீகரிக்கப்பட்ட சங் கமாக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் 4 ஆயிரத்து 300 மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகளை தேர்வு செய்வது வழக்கம். தற்போதுள்ள நிர்வாகிக ளின் பதவி காலம் முடிவடைந்தது ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது.

இந்த நிலையில் நேற்றுதொமுச தலைவர், பொதுச் செயலர், பொருளாளர் உள்ளிட்டபல்வேறு நிர்வாகிகள் தேர்தலுக் கான வாக்குப்பதிவு நேற்று காலை5 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. இத்தேர் தலை நடத்துவதற்கு தொமுச பேரவையின் அமைப்பு செயலாளர் வேலுசாமி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

என்எல்சி தொழிலாளர்கள் பணியாற்றும் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x