Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

ரங்கம் கோயில் உண்டியலில் ரூ.47.62 லட்சம் :

திருச்சி

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 52 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில், ரூ.47,62,487 ரொக்கம், 81 கிராம் தங்கம், 935 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி(ரங்கம்), செ.மாரியப்பன் (திருவானைக்காவல்) ஆகியோர் முன்னிலையில் ரங்கம் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x