Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து கடை களும், வணிக நிறுவனங்களும் இரவு 7 மணிக்குள் மூடப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஒரு நாள் அதிக பாதிப்பு இதுவே ஆகும். இதனால், கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஏப்ரல் 20-ம்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ள நிலையில், திருப் பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபார சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், வணிகர் சங்கம், நகை வியாபாரிகள், மளிகை வியாபாரிகள் சங்கத்தினர், உணவக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோனைக்கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.
திருப்பத்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப் பிரகாசகம் தலைமை வகித்தார். இதில், கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது, ஏப்ரல் 20-ம் தேதி (நேற்று) முதல் மறு உத்தரவு வரும் வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைத்து கடைகளும் மூடுவது என்றும், நோய் தொற்று அதிகரித்தால் எதிர்காலங்களில் மாலை 5 மணியுடன் கடைகளை மூடுவது என்றும், கடை திறந்திருந் திருக்கும்போது அரசு அறிவித் துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது, கடை ஊழியர்கள் முதல் வாடிக்கையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்பதை உறுதி செய்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.
அதேபோல, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வாணியம்பாடியில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், காம்ப்ளக்ஸ் ஆகியவை வார நாட்களில் இரவு 7 மணிக்குள் மூடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தை கூடுதல் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்வது, ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் வாணியம்பாடியில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறப்ப தில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆம்பூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறை களையும் பின்பற்றப்படும் என்றும், ஆம்பூர் பாங்கி மார்க்கெட்டுக்கு வெளியே கடைகளை திறப்பது என்றும், வார நாட்களில் காலை முதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடைகளை மூடுப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT