Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று(ஏப்.20) முதல் பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏப்.20 (இன்று) முதல் 30-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) திருச்சி மண்டலம் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும். மேலும், பேருந்து நிலையங்களிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கல் செய்யப்படும் நகரப் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும். (புறநகர் பேருந்துகள் கடைசியாக இயக்கப்படும் நேரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது) எனவே, பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரம்பலூரில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT