Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நீர் திறப்பு கடந்த 11-ம் தேதி, விநாடிக்கு 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அணையின் நீர் மட்டம் நேற்று 97.62 அடியாகவும், நீர் இருப்பு 61.80 டிஎம்சி-யாகவும் இருந்தது. அணைக்கு நீர் வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 92 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று நீர் வரத்து 242 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT