Published : 17 Apr 2021 03:14 AM
Last Updated : 17 Apr 2021 03:14 AM

திட்டக்குடி அருகே - நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

திட்டக்குடி அருகே நிதிநத்தம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் இதுவரை சுமார் 8 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் மூட்டைகள் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட வேண்டிய நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாக்குகள் இல்லை என்று காரணம் கூறிநெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று காலை நிதிநத்தம் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிங்டன் பாசன சங்கதலைவர் மருதாசலம் தலைமையில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x