Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க - இன்னும் ஒரு வாரத்தில் 8,000 ஆயிரம் படுக்கைகள் தயார் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி தகவல்

கடலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கரோனாநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்துஅனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்துறை முதன்மை செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்ததாவது:

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மக்கள் கூடும் இடங்களை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் விதிமீறல் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தொடர்புடைய 30 முதல் 40 நபர்கள் வரை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொண்டு சங்கிலித்தொடர்பினை துண்டித்து நோய் பரவலை கட்டுப்படுத்த வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சிதுறை, மருத்துவத் துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். இவைகளில் நாளொன்றுக்கு 3,000 முதல் 4,000 நபர்கள் வரை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,914 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் கரோனா பாதுகாப்பு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 3,060 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் ஒருவார காலத்திற்குள் 8000-திற்கும் கூடுதலாக படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

முன்னதாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, திட்ட இயக்குநர்( ஊரக வளர்ச்சி) மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x