Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டு தினமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ‘பிலவ’ வருடம் தொடங்கியது. இந்த ஆண்டு மகிழ்ச்சியான, இயற்கை வளம், நோயற்ற ஆண்டாக மலர வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகளும், வழி பாடுகளும் நடைபெற்றன.
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றன. அகிலாண்டேஸ்வரிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு தமிழ் புத்தாண்டையொட்டி தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, வேலூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள செல்லியம்மன் கோயில், வேலூர் அரியூர் நாராயணி பீடம், புரம் பொற்கோயில், அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில், பச்சையம்மன் கோயில், காட்பாடி ஓடை பிள்ளை யார் கோயில், வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், வேலூர் - காட்பாடி சாலை துர்கையம்மன் கோயில், வேலூர் தேவி கருமாரியம்மன் கோயில், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில், பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இது தவிர அணைக்கட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், வெட்டுவானம் எல்லை யம்மன் கோயில், பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில், பாலமதி குழந்தை தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் கைலாசகிரி நாதர் கோயில், பிந்து மாதவர் கோயில், ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் உள்ள முனீஸ் வரன் கோயில், ஆம்பூர் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும், பெரிய ஆஞ்ச நேயர் கோயில், வாணியம்பாடி புத்துமாரியம்மன் கோயில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில் களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வழிபாடு முடிந்து நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT